UVC விளக்குகள் மூலம் கொரோனா அழிப்பு முயற்சி

0 4982

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுரங்கப் பாதை ரயில் நிலைய பகுதி உள்ளிட்ட இடங்களில் யுவிசி விளக்கு (UVC light ) வெளிச்சத்தின் மூலம் கொரோனா கிருமி அழிப்பு குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

அமெரிக்காவில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் நியூயார்க்கும் ஒன்றாக திகழ்கிறது.

அங்குள்ள சுரங்க பாதை ரயில் நிலைய பகுதிகளிலும், ரயில்கள், பேருந்துகளிலும், காலி இடங்களிலும் நியூயார்க் பெருநகர போக்குவரத்து ஆணையம் (New York Metropolitan Transportation Authority) டென்வரை சேர்ந்த புரோ லைட்டிங் நிறுவனம் தயாரித்த யுவிசி லைட்டுகள் மூலம் கொரோனாவை அழிக்கும் பரிசோதனையை நடத்தி வருகிறது. இதற்காக 150 யுவிசி  பிரிவுகளை அந்த ஆணையம் பயன்படுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments