அம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்தது

0 1966
ஓடுதளங்கள், விமான நிறுத்துமிடங்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளநீர்

அம்பன் புயலின் தாக்கத்தால் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

புயல் கரையைக் கடந்த போது கடும் சூறாவளிக் காற்றுடன் கனமழையும் கொட்டி தீர்த்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், கொல்கத்தா விமான நிலையத்திலும் வெள்ள நீர் புகுந்துள்ளது. மேலும் சில கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன.

ஓடுதளங்கள், விமானங்களை நிறுத்தி வைக்கும் இடங்களில் முழங்கால் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்த நிலையில், பயன்படுத்தப்படாமல் இருந்த 2 விமான நிறுத்துமிடங்கள் முற்றிலுல் இடிந்து விழுந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments