லடாக் நதியின் வடபகுதியில் இந்தியா சாலை அமைப்பு: சீனா குற்றச்சாட்டு

0 785

லடாக் நதியின் வட பகுதியில் இந்தியா சாலை அமைத்துள்ளதாகவும், இதற்கு  பதிலடி நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் சீனா கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் எல்லையிலும், லடாக் எல்லையிலும் கடந்த சில நாள்களாக இருநாடுகள் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. லடாக் விவகாரம் தொடர்பாக  இருநாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற  2 கட்ட  பேச்சுவார்த்தையில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

இந்நிலையில் சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,   எல்லையில் அமைதியை உறுதி செய்ய தங்கள் நாட்டு படை உறுதிபூண்டிருப்பதாகவும்,  இந்திய வீரர்கள் உடனடியாக தங்களது பகுதிகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments