10 சிறப்பு ரயில்கள் மூலம் 15,000 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர் - தெற்கு ரயில்வே

0 714
10 சிறப்பு ரயில்கள் மூலம் 15,000 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டனர்

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 10 சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை சுமார் 15 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பீகார், உத்தரப்பிரதேசம், மணிப்பூர், ஒடிஷா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்து சென்னை, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட மாநகரங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சுமார் 10 சிறப்பு ரயில்களில் தலா ஆயிரத்து 464 பேர்களாக இதுவரை 14 ஆயிரத்து 912 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சொந்த ஊர் செல்ல விரும்பி பதிவு செய்யும் தொழிலாளர்களை முறைப்படி உடல் பரிசோதனை செய்து, தனிநபர் இடைவெளியோடு ரயில்களில் அனுப்புவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments