ட்விட்டர் தகவல்களை கண்காணிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

0 497
ட்விட்டர் தகவல்களை கண்காணிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை கண்காணிக்க விதிமுறைகளை வகுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவைச் சேர்ந்த வினீத் கோயங்கா என்பவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், அரசியல் கட்சி தலைவர்கள், அதிகாரிகளின் பெயர்களில் சுட்டுரையிலும் முகநூலிலும் போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் மக்களிடம் பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமார் மூன்றரை கோடி பேர் சுட்டுரையிலும், 35 கோடி பேர் முகநூலில் கணக்கு வைத்திருப்பதாகவும், அதில் பத்து சதவீதம் போலி கணக்குகள் என ஆய்வுகள் கூறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேர்தல் சமயங்களில் வேட்பாளர்கள் குறித்து தவறான செய்திகள் பரப்பப்படுவதால், சுட்டுரை உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உள்ள தகவல்களை கண்காணிக்க விதிமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments