விமான பயணிகளுக்கு ஆரோக்ய சேது செயலி கட்டாயம்-விமான நிலையங்கள் ஆணையம் அறிவிப்பு

0 5784

உள்நாட்டு விமான போக்குவரத்து 25ம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், விமான பயணம் செய்வோர் செல்போன்களில் கட்டாயம் ஆரோக்ய சேது செயலியை பதிவிறக்கம் செய்திருக்க வேண்டுமென்று  விமான நிலையங்கள் ஆணையம் (Airports Authority of India) தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நிறுத்தப்பட்ட உள்நாட்டு விமான போக்குவரத்து 25ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. 

இந்நிலையில் விமான நிலையங்கள் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், விமான பயணிகள் அனைவரும் செல்போன்களில் ஆரோக்ய சேது செயலி பதிவிறக்கம் செய்திருப்பதை விமான நிலைய நுழைவு வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையும், விமான நிலைய ஊழியர்களும் உறுதிபடுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments