இந்தியாவுடனான எல்லைத் தகராறில் சீனாவின் தொந்தரவு தரும் நடத்தைக்கு அமெரிக்கா கண்டனம்

0 6618

இந்தியாவுடனான எல்லைத் தகராறில் சீனாவின் தொந்தரவு தரும் நடத்தைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

எல்லை தொடர்பாக இந்தியாவுடன் சீனா மேற்கொள்ளும் தகராறுகள், அந்நாட்டின் ஆக்கிரமிப்பு குணம் வெறும் வார்த்தைகளோடு நின்று விடுவதில்லை என்பதையே காட்டுவதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி ஆலிஸ் வெல்ஸ் கூறியுள்ளார்.

தென் சீனக் கடல் பகுதியாக இருந்தாலும், இந்தியாவுடனான எல்லையாக இருந்தாலும், ஆத்திரமூட்டும் மற்றும் தொந்தரவு செய்யும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் இத்தகைய போக்கு, அதிகரித்து வரும் வல்லமையை அந்த நாடு எப்படி பயன்படுத்த முயற்சி செய்யும் என்பது குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்புவதாகவும் ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments