அரசு மகப்பேறு மருத்துவமனையில் 54 பேருக்கு கொரோனா

0 574
அரசு மகப்பேறு மருத்துவமனையில் 54 பேருக்கு கொரோனா

சென்னை ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 47 கர்ப்பிணிப் பெண்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிரசவத்துக்காக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு குழந்தை பிறந்தவுடன் பிற தாய்மார்கள் இருக்கும் வார்டுக்கு மாற்றப்பட்டார். 3 நாட்களில் அவருக்கு காய்ச்சல் அறிகுறி ஏற்பட, பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து அவர் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பிற பணியாளர்கள் ஆகியோரை பரிசோதித்ததில், அவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதியானது. இதுபோக அங்கு சிகிச்சை பெற்று வந்த 47 கர்ப்பிணிப் பெண்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments