நாட்டில் கொரோனா பாதிப்பு 1.12 லட்சமாக உயர்வு

0 963
நாட்டில் கொரோனா பாதிப்பு 1.12 லட்சமாக உயர்வு

கொரோனா தொற்று நோயால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 609 பேர் பாதிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் அந்நோய் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று நோயால் குணமாவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், மறுபக்கத்தில் நோய் பாதிப்பும் வேகம் காட்டி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 5 ஆயிரத்து 609 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய்க்கு 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 359ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நாட்டில் கொரோனா நோய்க்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 435ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொரோனாவுக்கு 63 ஆயிரத்து 624 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இதுதவிர்த்து, 45 ஆயிரத்து 300 பேர் மருத்துவ சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 297ஆகவும், பலி எண்ணிக்கை ஆயிரத்து 390ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட 2ஆவது மாநிலமான தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 191ஆகவும், பலி எண்ணிக்கை 87ஆகவும் உயர்ந்துள்ளது. 3ம் இடத்திலுள்ள குஜராத்தில் கொரோனா பாதிப்பு 12 ஆயிரத்து 537ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி 749ஆக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments