கொரோனா -40 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

0 809
கொரோனா -40 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புடைய 40 ஆயிரம் பேர் குணமாகி வீடு திரும்பியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்பு குணமடைந்தோர் விகிதம் ஏழு சதவீதமாக இருந்த நிலையில் தற்போது அது 40 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சுமார் 6 புள்ளி 39 சதவீதம் நோயாளிகள் மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறவர்களாக இருப்பதாகவும் அதிலும் மூன்று சதவீதத்திற்கும் குறைவான அளவிலேயே நோயாளிகளுக்கு வென்டிலேட்டர், செயற்கை சுவாசம் போன்ற அதிதீவிர சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இந்த எண்ணிக்கை 15 சதவீதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளி விவரங்களையும் அரசு சுட்டிக் காட்டியுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியா எவ்வளவோ குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அரசின் சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments