விமானங்கள் 25ம் தேதி முதல் இயக்கம்-இன்று முதல் முன்பதிவு

0 6717
விமானங்கள் 25ம் தேதி முதல் இயக்கம்-இன்று முதல் முன்பதிவு

விமானங்களுக்கான முன்பதிவை விமான நிறுவனங்கள் இன்று தொடங்கியுள்ளன. ஸ்பைஸ் ஜெட் போன்ற தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்து பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளன.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு வரும் 25ம் தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையில் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, விமான நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் தடுமாறிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதனிடையே அனைத்து விமான நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் இயக்குனரக அதிகாரிகள் இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளனர்.

விமானத்தில் பயணிகளை முழு அளவில் ஏற்றுவதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது , வரிசைகளில் நிற்கும்போது இரண்டு நபர் இடைவெளி விட்டு தள்ளி நிற்பது உள்ளிட்ட நடைமுறைகளை விமான நிலையங்களில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments