மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்...10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

0 708
மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் பைக் ரேஸ்...10க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நள்ளிரவில் தடையை மீறி இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ஆங்காங்கே போலீசார் தடுப்புகளை அமைத்து இரவுபகலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ராயப்பேட்டையில் ஒன்று கூடிய இளைஞர்கள் சிலர் கூட்டமாகச் சென்று மெரினா கடற்கரை சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டனர்.

ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் ரேஸில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தி மடக்கி பிடித்தனர். பத்துக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென ரேஸ் நடத்தப்பட்ட காரணம் குறித்து அண்ணாசாலை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments