பெற்ற தாயை மானபங்கபடுத்திய குடிகார மகன்..! கழுத்தை இறுக்கிய கொடுமை

0 14505
நாகர்கோயில் அருமனை அருகே குடிக்க பணம் கேட்டு, கொடுக்க மறுத்ததால், பெற்ற தாயென்றும் பாராமல் மானபங்கம் படுத்தியதோடு, கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற குடிகார மகனிடம் இருந்து மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் போராடி மீட்டனர்.

நாகர்கோயில் அருமனை அருகே குடிக்க பணம் கேட்டு, கொடுக்க மறுத்ததால், பெற்ற தாயென்றும் பாராமல் மானபங்கம் படுத்தியதோடு, கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்ற குடிகார மகனிடம் இருந்து மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் போராடி மீட்டனர்.

குடித்துவிட்டு சாலையை படுக்கையாக்கும் குடிகார கோமான்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

டாஸ்மாக்கில் வசூல் சாதனை... நீண்ட வரிசை எல்லாம்.. முடிந்து மதுவாங்க கையில் பணமில்லாமல் எதை எடுத்து விற்பது என்ற விபரீத மன நிலையில் குடிமகன்கள் சுற்றித்திரிகின்றனர்.

நாகர்கோவில் அருமனை அடுத்த பன்னவிளையை சேர்ந்த 35 வயது குடிகாரர் வினு என்பவர் ஏற்கனவே மூக்கு முட்ட குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மீண்டும் குடிப்பதற்காக தனது தாயிடம் பணம் கேட்டுள்ளான்.

பணத்தை வீட்டில் வைத்திருந்தால் குடிகார மகன் திருடிவிடுவான் என தனது மேலாடைக்குள் மறைத்து வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. போதை கண்ணை மறைக்க பெற்ற தாயென்றும் பாராமல், ஆடையை கிழித்து மானபங்கபடுத்திய வினு, பணத்தை தரமறுத்த தாயின் கழுத்தை இறுக்கிப்பிடித்து கொலை செய்ய முயன்றுள்ளான்

இதனை பார்த்த உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வினுவிடும் சிக்கி உயிருக்கு போராடிய அவனது தாயை போராடி மீட்டனர். குடிக்காரான் வினுவோ தான் இடுப்பில் கட்டியிருந்த வேட்டி கழண்டது கூட தெரியாமல் வம்பு செய்து கொண்டிருந்தான்

இதே போல தூத்துக்குடியில் சீனியர் குடிகாரர் ஒருவர் தன்னிலை மறந்து சாலையில் விழ, இளைஞர் ஒருவர் சென்று தூக்கி விட்டார் தள்ளாடி தள்ளாடிச் சென்ற அந்த போதை வண்டி அடுத்ததாக ஒரு இடத்தில் தடம் புரண்டது

கோவையில் குடித்த உற்சாகத்தில் சாலையை மெத்தயாக்கிய குடிமகனை சிலர் அங்கிருந்து இழுத்துச்செல்ல , சாலையில் இருந்து எழுந்திருக்க மறுத்து பள்ளிக்கு செல்ல மறுக்கும் குழந்தை போல அடம் பிடித்தார் அந்த குடிமகர்..!

குடிமகன்கள் போதையில் செய்யும் அட்டகாசங்களும், கோமாளித்தனங்களும், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு இந்த காட்சிகளே சாட்சி..! அதே நேரத்தில் குடியை கெடுக்கும் மதுவின் தீமையை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments