கிடு கிடுக்க வைக்கும் கொரோனா... மிரளும் உலக சமூகம்..!

0 1215

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 19 லட்சத்து 80 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.  ரஷியாவில், பாதிப்பு உச்சத்தை எட்ட, பாகிஸ்தானில் ஆளுங்கட்சி பெண் உறுப்பினர் ஒருவர், கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளார்.

வல்லரசு நாடுகள் முதல் குட்டி நாடுகள் வரை, உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம், கொடூர கொரோனாவின் ஆக்டோபஸ் கரம் நீண்டுள்ளது.அமெரிக்காவில், ஒரே நாளில் 3 ஆயிரத்து 831 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, ரஷியாவில், 8 ஆயிரத்து 764 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 215 பேரும், ரஷியாவில் 136 பேரும் கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.

பிரேசிலில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தொற்று, ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் 343 பேர் பாதிக்கப்பட, ஈரானில், 2 ஆயிரத்து 346 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது.

சீனாவைப் பொறுத்தவரை, ஒரே நாளில் 5 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.அதேநேரம், கனடா, சவுதி அரேபியா, மெக்சிகோ, பாகிஸ்தான், கத்தார், பெலாரஸ், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தது.

ஸ்பெயினில், வியாழக்கிழமை முதல் முக கவசம் அணிவது கட்டாயம் எனஅறிவிக்கப்பட்டு உள்ளது. தென் கொரியாவில், 3 மாதங்களுக்குப்பிறகு, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன.
இதனிடையே,பாகிஸ்தானின் ஆளும் தெஹ்ரீத் - இ- இன்சாப் கட்சியின் பஞ்சாப் மாகாண அவையின் உறுப்பினராக பணியாற்றி வந்த 60 வயது ஷாஹீன் ரஜா , கொரோனாவால் உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments