உச்சம் தொட்ட அதிர்ச்சி.. உலுக்கும் கொரோனாவால் மிரளும் சென்னை..!

0 7541

சென்னை - கோயம்பேடு பகுதியை உள்ளடக்கிய கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, ஆயிரத்தை கடந்து, உச்சம் தொட்டு அதிர வைத்துள்ளது. ஒரே பகுதியில் மட்டும் பாதிப்பு அதிகரித்து வருவதால், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, சுகாதாரப்பணியாளர்கள் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். இதுபற்றிய செய்தித்தொகுப்பு..

மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணிகள் தமிழகத்தில் முடுக்கி விடப்பட்ட போதிலும் வைரஸ் தொற்றின் புதிய உச்சம் சென்னையை உலுக்கி வருகிறது. கொரோனாவின் கேந்திரமான ராயபுரம் மண்டலத்திற்கு அடுத்தபடியாக கோயம்பேட்டை உள்ளடக்கிய கோடம்பாக்கம் மண்டலம், வைரஸ் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 6 நாட்களை பொறுத்தவரை இங்கு, நாளொன்றுக்கு சராசரியாக 50 பேர் வீதம் வைரஸ் தொற்று உறுதி ஆக, கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு, உச்சத்தை எட்டி உள்ளது. குறிப்பாக, கோயம்பேட்டில் மட்டும் 427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்பேடு பகுதியை சுற்றியுள்ள சின்மயா நகர், விருகம் பாக்கம், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர் மற்றும் கோடம்பாக்கம் என பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்கிறது.

ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித் திருப்பதால் அடுத்தடுத்த நாட்களில் கொரோனா பாதிப்பு உயரும் என அச்சம் தெரிவித்துள்ள சுகாதாரத் துறையினர், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக, கோடம்பாக்கம் மண்டலத்தில் மட்டும் 30 சுகா தார ஆய்வாளர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

தனிநபர் இடைவெளி, முக கவசம் அணிவது, கைகளை சோப்பு போட்டு கழவி சுத்தமாக வைத்துக் கொள்வது என அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்தால் தமிழக அரசு அறிவித்துள்ள "கொரோனாவை விரட்டுவோம்" என்ற முழக்கம் நிச்சயம் வெற்றி பெறும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments