9000 பேரை ஆட்குறைப்பு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் முடிவு

0 2001

கொரோனா மற்றும் ஊரடங்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் 9000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விமான எஞ்சின்கள் தயாரிப்பில் இந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது. கொரானாவால் விமானப் போக்குவரத்துத் துறை முடங்கி உள்ளது. போயிங் 787 மற்றும் ஏர்பஸ் 350 ரக விமானங்களுக்கு எஞ்சின் தயாரித்து அளிப்பதும் முடங்கி உள்ளதால் தனது தொழிற்சாலைகளை மூடவும் ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவுக்குப் பிந்தைய புதிய உலகச் சூழலில் தேவைக்கு மட்டுமே உற்பத்தி என்ற கொள்கையை பின்பற்ற உள்ளதால், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அதன்  தலைமை அதிகாரி வாரன் ஈஸ்ட் தெரிவித்துள்ளார். ரோல்ஸ் ராய்சுக்கு சர்வதேச அளவில் 52000 பணியாளர்கள் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments