தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா

0 7490

தமிழகத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ள தால், இதுவரை கொரோனா சிகிச்சை முடிந்து, 5 ஆயிரத்து 882 பேர் வீடு திரும்பி உள்ளனர். 60 வயதுக்கு மேல், வைரஸ் தொற்று உறுதி ஆனவர்களின் எண்ணிக்கை  ஆயிரத்தை கடந்து விட்டது. 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த சென்னை மற்றும் திருவள் ளூரை சேர்ந்த 3 பேர் உயிரிழந்ததால், பலிஎண்ணிக்கை 87ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றை கண்டறிவதற்காக ஒரே நாளில் மட்டும் 11 ஆயிரத்து 894 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

7,219 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வர, அறிகுறியுள்ள சுமார் 5 ஆயிரம் பேர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், குணம் அடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 800 ஐ தாண்டி விட்டது.

12 வயதுக்குட்பட்டோரில் மொத்தம் 803 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 13 முதல் 60 வயது வரையில் 11 ஆயிரத்து 381 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments