உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்தது

0 1766

உலகம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் மூனேகால் லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல நாடுகள் அதை தளர்த்தத் தொடங்கியுள்ளன. தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் அதன் பாதிப்பு தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் அந்த எண்ணிக்கை இன்று 50 லட்சத்தை தாண்டியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கையும் மூனேகால் லட்சத்தை (3.25 லட்சம்) கடந்துள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் கொரோனா நோய்க்கு 27 லட்சம் பேர் சிகிச்சை எடுத்து வரும் நிலையில், மருத்துவ சிகிச்சையில் இதுவரை 19 லட்சத்து 70 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

உலகில் கொரோனாவின் மையபுள்ளியாக திகழும் அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டிவிட்டது. இதேபோல் அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கையும் 93 ஆயிரத்தை கடந்துவிட்டது.

அமெரிக்காவுக்கு அடுத்து அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா திகழ்கிறது. அந்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சமாகவும், பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 900ஆகவும் அதிகரித்துள்ளது. இதற்கடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக திகழும் ஸ்பெயின், பிரேசில், பிரிட்டன், இத்தாலி நாடுகளிலும் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. இதேபோல் அந்த 4 நாடுகளிலும் உயிரிழப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, துருக்கி, ஈரான் நாடுகளிலும் பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments