சாலையில் கேட்பாரற்று கிடந்த 1 மில்லியன் டாலர்... போலீசிடம் ஒப்படைத்த தம்பதி

0 4319
சாலையில் கேட்பாரற்று கிடந்த 1 மில்லியன் டாலர்... போலீசிடம் ஒப்படைத்த தம்பதி

அமெரிக்காவில் சாலையில் கிடந்த ஒரு மில்லியன் டாலர் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த அந்நாட்டு தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விர்ஜீனியா மாநிலம், கரோலின் கண்டி பகுதியை சேர்ந்த டேவிட்-எமிலி சாண்ட்ஸ் தம்பதியினர், காரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் கேட்பாரற்று கிடந்த இரண்டு பெரிய பைகளை காரில் ஏற்றி வீட்டிற்கு கொண்டுவந்து பார்த்துள்ளனர்.

அதில் ஏராளமான பணம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, அது குறித்து போலீசாருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, பைகளில் இருந்த ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணையும் நடத்தி வருகின்றனர். இதன் மதிப்பு இந்திய ரூபாயில், சுமார் 7 கோடியே 57 லட்சம் ஆகும்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments