உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட உராங்குட்டான் குட்டி மரணம்

0 770

ஜெர்மனியின் உயிரியல் பூங்காவில் இறந்த உராங்குட்டான் குரங்கு இறந்ததற்கு கொரோனா காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அங்குள்ள லெய்ப்ஸிக் விலங்கியல் பூங்காவில் ஒன்பது மாதமேயான ரிமா உராங்குட்டான் குரங்கின் குட்டி ஒன்று கடந்த வாரம் திடீரென உயிரிழந்தது. இதையடுத்து பீட்டா அமைப்பின் ஜெர்மன் கிளை ரிமா உயிரிழப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்துள்ள நிலையில் விலங்குகளுக்கும் வைரஸ் தொற்று இருப்பதை பீட்டா சுட்டிக் காட்டியுள்ளது. எனவே கொரோனா தாக்கம் காரணமாக உராங்குட்டான் குட்டி இறந்திருக்கலாம் என பீட்டா குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் பீட்டாவின் குற்றச்சாட்டை ஜெர்மனி மறுத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments