80 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்படும் டாஸ்மேனியன் புலியின் பழைய வீடியோ கண்டுபிடிப்பு

0 1426

ஆஸ்திரேலியாவில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன் முற்றிலும் அழிந்துபோனதாக கூறப்படும் டாஸ்மேனியன் புலியின் பழைய வீடியோ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தைலாசின் எனப்படும் டாஸ்மேனியன் புலி மனித ஆக்கிரமிப்பு மற்றும் வேட்டையாடுதலால் 80 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போனதாகக் கூறப்படுகிறது. இறுதியாக ஹோபர்ட் விலங்கியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட பெஞ்சமின் என்ற தைலாசினின் வீடியோ பதிவுகள் மட்டுமே தற்போது உள்ளன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் தேசிய திரைப்பட மற்றும் ஒலி காப்பகத்தில் மாயமானதாகக் கருதப்படும் டாஸ்மேனிய புலியான பெஞ்சமினின் வீடியோ பதிவுகள் தற்போது மீண்டும் கிடைத்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments