பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை

0 595
பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் முக்கியத் தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஹிஸ்புல் அமைப்பின் முக்கியத் தளபதியான ஜூனைத் செஹாரி கொல்லப்பட்டான்.

ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்ஹடல் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.

நேற்று முன்தினம் தொடங்கி சுமார் 15 மணி நேரம் நடந்த சண்டைக்குப் பின்னர் இரு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தீவிரவாதிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் ஒருவன் ஹிஸ்புல் அமைப்பின் முக்கியத் தளபதியான ஜுனைத் அஷ்ரப் கான் செஹாரி எனத் தெரியவந்தது.

காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளின் போது, கல்லெறியும் கும்பலை வழிநடத்துதே செஹாரயின் முக்கியப் பணி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments