தங்கம் விலை சவரனுக்கு ரூ.36,000ஐ மீண்டும் தாண்டியது

0 6218
தங்கம் விலை சவரனுக்கு ரூ.36,000ஐ மீண்டும் தாண்டியது

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மீண்டும் 36 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

நேற்று முன்தினம் சவரன் தங்கத்தின் விலை 36 ஆயிரத்து 624 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 35 ஆயிரத்து 872 ரூபாயாக குறைந்தது. இதேபோல் நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 578 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கம் விலை நேற்று 4 ஆயிரத்து 484 ரூபாயாக சரிந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் ஒரு கிராமின் விலை 40 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 524 ரூபாயாக உள்ளது. இதேபோல் சவரன் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து, 36 ஆயிரத்து 192 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 51 ஆயிரத்து 500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று ஆயிரத்து 300 ரூபாய் உயர்ந்து 52 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments