சில நொடிகளில் கொரோனா பரிசோதனை முடிவை அளிக்கும் நவீன லேசர் கருவி

0 1330

கொரோனா பரிசோதனையில் சில நொடிகளில் முடிவுகளைத் தெரிவிக்கும் லேசர் பரிசோதனை கருவியை கண்டுபிடித்துள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

டாக்டர் பிரமோத்குமார் என்பவரின் தலைமையிலான குழுவினர் குவாண்ட்லேஸ் இமேஜிங் QuantLase Imaging Lab என்ற ஆராய்ச்சி கூடத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் இந்த லேசர் சிகிச்சை கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விநாடிகளில் முடிவு தெரிந்துகொள்ள முடியும் என்பதால் கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

திரையரங்குகள்,மருத்துவமனைகள், மால்கள் , பள்ளி, கல்லூரிகள் மற்றும் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ள இடங்களில் இந்த பரிசோதனை முறை மிகவும் பலன் தரும் என்றும் கூறப்படுகிறது. இது போன்ற முயற்சிகளுக்கு அரசு ஆதரவளிக்கும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் முகமது பின் நாசர் குவாயிஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த சில மாதங்களில் இந்த பரிசோதனை கருவி சந்தைப்படுத்தப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments