அலுவலகங்கள், பணியிடங்களுக்கான புதிய வழிகாட்டல்கள் வெளியீடு

0 1032

அலுவலகங்கள் உள்ளிட்ட பணியிடங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் புதிய வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு பெருமளவு தளர்த்தப்பட்டிருக்கும் நிலையில், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவை இயங்கத் தொடங்கியுள்ளன . இந்நிலையில் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர் குறித்து உடனடியாக மாநில சுகாதார அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் மற்ற பணியாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு பேருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அலுவலகத்தை மூடி சீல் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பணிகளை நிறுத்த வேண்டியதில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் பரவியிருந்தால் மட்டும் 48 மணி நேரம் மூடி விட்டு கிருமி நாசினியால் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிக்கு செல்பவர் அனைவரும் முகக்கவசம் அணிவதும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments