அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிப்பு

0 1841
அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரிப்பு

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் காடழிப்பு நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் கடுமையாக உயர்ந்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

அந்த நிறுவனம் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப்பட்ட தகவலின் படி இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் அமேசானின் வனப்பரப்பில் ஆயிரத்து 202 சதுர கிலோ மீட்டர் பரப்பு அழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அமேசான் உலகின் மிகப் பெரிய மழைக்காடுகள் ஆகும். புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்த அமேசான் காடுகள் பெருமளவில் உதவி புரிவதால் அதனை காப்பது அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பிரேசிலில் உள்ள பழங்குடியின நிலத்தின் பெரும்பாலான பகுதிகள் அமேசானில் தான் உள்ளது. அந்த நிலம் அங்கு வாழும் 9லட்சம் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments