கொய்யா ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து -6 பேர் உயிரிழப்பு

0 741
கொய்யா ஏற்றிய லாரி கவிழ்ந்து விபத்து -6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு கோர விபத்துகள் நேர்ந்துள்ளன.

கொய்யாப்பழம் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று கவிழந்ததில் 6 விவசாயிகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.ஒருவர் காயம் அடைந்தார் .சம்பவ இடத்தில் இருந்து உடல்களை மீட்ட போலீசார், விபத்து நேரிட்டது எப்படி என்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். லாரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மற்றொரு விபத்தில் ஆக்ரா-லக்னோ தேசியநெடுஞ்சாலையில் சுமார் 50 புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments