காதல் ஜோடிகளை அடித்து விரட்டிய அலைகள்..! லவ் டவுன் காட்சிகள்.!

0 10346

சென்னையில் மெரீனா கடற்கரைக்குள் மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், காசிமேடு தூண்டில் வளைவில் பாறைகளுக்கு இடையே அமர்ந்திருந்த காதல் ஜோடிகள் ராட்சத அலையில் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பினர். 

சென்னை மெரீனா , பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், 50 நாட்கள் ஊரடங்கிற்கு பின்னர் சந்தித்துக் கொண்ட காதல் ஜோடிகள் தங்கள் சந்திக்கும் இடத்தை காசிமேடு தூண்டில் வளைவுக்கு மாற்றியுள்ளனர்.

அம்பன் புயல் எச்சரிக்கையால் அலையின் தீவிரத்தை உணர்ந்து மீனவர்களே கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி விட்டு ஓய்வெடுக்க, காதல் ஜோடிகள் தங்கள் காதலை வளர்க்க தனிமையான இடம் தேடி பாறை இடுக்குகளை நாடிச்சென்றனர்.

போலீஸ் கெடுபிடி ஏதும் இல்லாததால் தங்களது பராக்கிரமத்தை காதலியிடம் காட்டுவதற்காக, சில இளைஞர்கள் தூண்டில் வளைவின் முனை வரை அழைத்துச் சென்று வருங்காலத் திட்டம் குறித்து பேசத்தொடங்கினார்.

அப்போது வந்த ராட்சத அலையில் சிக்கிய காதலன், காதலியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதால் இழுத்து செல்லப்படுவதில் இருந்து நூலிழையில் உயிர் தப்பினார்.பாறையில் கால் மோதி இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டாலும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தத்தி தாவி மெல்ல அமர்ந்து அமர்ந்து கரைக்கு வந்து சேர்ந்தன

அலையின் வேகம் அதிகரிப்பதை கண்டதும் ஒதுங்க இடம் தேடிய காதலர்கள் , விட்டால் போதும் என்று அங்கிருந்து ஓட்டமெடுக்க தொடங்கினர்..!

ஆழமான பகுதி, ஆபத்தான கடல் பகுதி என்று எத்தனை முறை எச்சரித்தாலும், அதனை இவர்களை போல காதல் கண்ணை மறைத்த ஜோடிகள் கண்டு கொள்வதில்லை என்பதே கசப்பான உண்மை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments