1 லட்சத்தை கடந்த பாதிப்பு... குணமடைவோர் அதிகரிப்பு..!

0 2646
1 லட்சத்தை கடந்த பாதிப்பு... குணமடைவோர் அதிகரிப்பு..!

இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது

நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கொரோனாவில் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், தொற்றுநோய் பாதிப்பு வேகமெடுத்திருக்கிறது.

மகாராஷ்டிராவில், கடந்த சில நாட்களாக, ஒரே நாளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 2 ஆயிரத்தை தாண்டியே பதிவாகிறது. பல மாநிலங்களில், ஒருநாளில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, சராசரியாக, 500க்கும் அதிகமாகவே காணப்படுகிறது.

நாட்டிலேயே, கொரோனாவால் பாதிக்கப்படும் மாநிலங்களில், உச்சத்திலேயே தொடரும் மகாராஷ்டிராவில், தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழ்நாட்டுடன், நெருங்கிய நிலையிலேயே தொடரும் குஜராத்தில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

நாட்டின் தலைநகரை தன்னகத்தே கொண்டிருக்கும் டெல்லியிலும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. அங்கு, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், உத்திரப்பிரதேசத்தில் 4 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

ஆந்திரா மற்றும் மேற்குவங்காளத்திலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

தேசிய அளவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தோர் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. 10 மாநிலங்கள், மற்றும் யூனியன் பிரதேசங்களில், கொரோனா பலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments