அதிமுகவில், ஊராட்சி கழகச் செயலாளர் பொறுப்பு ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு

0 4141
அதிமுகவில், செயல்பட்டு வரும் ஊராட்சி கழகச் செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில், செயல்பட்டு வரும் ஊராட்சி கழகச் செயலாளர் பொறுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊராட்சி கழகச் செயலாளர்களாக பணியாற்றி வந்த அனைவருக்கும் விரைவில் மாற்றுப் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவும், நிர்வாக வசதிக்காக, சென்னை, வேலூர், கோவை, மதுரை என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக  தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை மண்டலத்துக்கு அஸ்பயர் சுவாமிநாதன், வேலூர் மண்டலத்துக்கு கோவை சத்யன், கோயம்புத்தூர் மண்டலத்துக்கு சிங்கை ராமச்சந்திரன் மற்றும் மதுரை மண்டலத்துக்கு ராஜ் சத்யன் புதிய மண்டலச் செயலாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments