இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறைவு

0 6270
இந்தியாவில் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால், கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டுவதற்கு, வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதித்துள்ள மற்ற நாடுகளை காட்டிலும் அதிக நாட்கள் ஆகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 100லிருந்து ஒரு லட்சத்தை எட்டுவதற்கு 64 நாட்கள் தேவைப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் 25 நாட்களுக்குள் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

அதே போன்று இத்தாலியில் 36 நாட்களும், பிரிட்டனில் 42 நாட்களும், பிரான்சில் 39 நாட்களும் ஆனது. ஜெர்மனியில் 35 நாட்களிலும், ஸ்பெயினில் 30 நாட்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை 100லிருந்து ஒரு லட்சத்தை தொட்டுவிட்டது.

இதன் மூலம் இந்தியாவில் வைரஸ் பரவல் வேகத்தின் விகிதம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. தற்போதைய சூழலில் உலக அளவில் ஒரு லட்சத்திற்கு 60 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments