தர்மநல்லூர் கிராமத்தில் உள்ளாட்சி தேர்தலின் போது ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினரிடையே மோதல்

0 6879
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

விருத்தாசலத்தை அடுத்த தர்மநல்லூர் கிராமத்தில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றபோது அதே ஊரை சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் 3 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் தர்மநல்லூர் கிராமத்தில் இன்று இரு தரப்பினரும் மீண்டும் திரண்டு மாறிமாறி கற்கள் கட்டைகளால் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

மூர்க்கத்தனமாக இருதரப்பிலும் தாக்கிக் கொண்டதால் அப்பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது.

தாக்குதலில் ஈடுபட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து கம்மாபுரம் காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments