புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்வோருக்கு ரூ.25 கோடி நிதியுதவி

0 3982
புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு 2 திட்டங்களின்கீழ் 25 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு 2 திட்டங்களின்கீழ் 25 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மெகா கண்டுபிடிப்பு சவால் என்ற திட்டத்தின்கீழ்  10 நபர்களுக்கு தலா  5 லட்சம் ரூபாய் நிதியுதவியும்,  புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் (innovation voucher programme)  ஆயிரம் பயனாளிகளுக்கு, தலா  2 லட்சம் முதல்  5 லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும்  வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெகா கண்டுபிடிப்பு சவாலுக்கு, மே 29-ம் தேதிக்குள் www.tnigc.in என்ற இணையதளத்திலும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்ட  நிதியுதவியைப் பெற https://www.editn.in/  என்ற இணையதளத்தில் ஜூலை 15-ம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments