ஜூன் 1ந் தேதி அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15ந் தேதிக்கு ஒத்திவைப்பு

0 7602
ஜூன் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் 15ம் தேதிக்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது.

ஜூன் 1ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று  ஜூன் 15ம் தேதிக்கு தமிழக அரசு ஒத்திவைத்துள்ளது. 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அண்மையில் அந்தத் தேர்வு ஜூன் 1 ம் தேதி தொடங்கி 12ம் தேதி வரை நடைபெறுமென தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 11 ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வு, ஜூன் 16 ஆம் தேதி நடைபெறும் என்றும், 12 ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வு 18 ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

 

தேர்வு நாள் விவரம்

ஜூன் 15 - மொழி பாடத் தேர்வு

ஜூன் 17 - ஆங்கில பாடத் தேர்வு

ஜூன் 19 -கணிதப் பாடத் தேர்வு

ஜூன் 20 - விருப்ப மொழிபாடத் தேர்வு

ஜூன் 22 - அறிவியல் பாடத் தேர்வு

ஜூன் 24 - சமூக அறிவியல் பாடத் தேர்வு

ஜுன் 25 - தொழில்கல்வி தேர்வு

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments