ஒற்றை, இரட்டைப் படை கார்கள் போன்று நிறுவனங்கள் திறப்பிலும் மாறுபட்ட முறை

0 806
ஒற்றை, இரட்டைப் படை கார்கள் போன்று நிறுவனங்கள் திறப்பிலும் மாறுபட்ட முறை

டெல்லியில் ஒற்றை, இரட்டைப் படை எண் கார்கள் முறை போன்று, நிறுவனங்கள் திறப்பிலும் மாறுபட்ட முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் A முதல் L வரையிலான எழுத்துக்களுடன் தொடங்கும் பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணிவரையும், M முதல் Z வரையிலான எழுத்துக்களுடன் தொடங்கும் பெயர்களைக் கொண்ட நிறுவனங்கள் காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணிவரையும், செயல்பட அனுமதிக்கப்படும் என்றார்.

தனியார் நிறுவனங்கள் முழுமையான ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், ஆனால் பெரும்பாலான ஊழியர்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் தற்போது டெல்லியில் உள்ள தொழிலாளர்களை மட்டும் கொண்டு கட்டிடப் பணிகளைத் தொடங்கலாம் என்றும் தெரிவித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments