நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினால் சுற்றுச்சூழலுக்கு நன்மை - மத்திய சுற்றுச்சூழல் துறை

0 1105
நாடு முழுவதும் பொதுமுடக்கத்தினால் சுற்றுச்சூழலுக்கு நன்மை

நாடு முழுவதும் அமலில் உள்ள பொது முடக்கம் காரணமாக சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட நன்மைகள் தொடர வேண்டுமானால், பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு சுற்றுச்சூழல் தொடர்பான விதிகள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாசுக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பான சட்டங்களை மாநிலங்கள் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு மாநில அரசுகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சுற்றுச்சூழல் விதிகள் தொடர்பாக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments