மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,198ஆக உயர்வு

0 969
மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,198ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 198 ஆக உயர்ந்துள்ளது.

7 ஆயிரத்து 688 பேர் பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பி உள்ளனர். 33ஆயிரத்து 53 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் மும்பை தாராவியில் நேற்று ஒரே நாளில் 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு உயிரிழந்தோர் வரிசையில் குஜராத் 2வது இடத்திலும், மத்திய பிரதேசம் 3வது இடத்திலும், மேற்கு வங்காளம் 4வது இடத்திலும் மற்றும் ராஜஸ்தான் 5வது இடத்திலும் உள்ளன.

 மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா நோய்க்கு 51 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 33 பேருக்கு கொரோனா நோய் உறுதியாகியுள்ளது. இதேபோல் கொரோனா நோய்க்கு சிகிச்சை பலனில்லாமல் ஒரே நாளில் 51 பேர் பலியாகியுள்ளனர். இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 58ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் அந்த மாநிலத்தில் கொரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கையும் ஆயிரத்து 249ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments