ஓப்பன் தி பாட்டில்.. அடாவடி செய்யும் குடிகார சண்டியர்ஸ்..! போலீசும் தப்பவில்லை

0 6022

தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்துள்ள நிலையில், குடிமகன்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மதுக்கடை பாதுகாப்புக்குச் சென்ற ஆயுதப்படை போலீசிடம் வம்பிழுத்து குடிமகன்கள் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...தமிழகத்தில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் ஆடு களவானி கும்பல் ஒன்று குடிபோதையில் 4 பேரை கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியாகி உள்ளார். 12 குடிகார சண்டியர்களும் தலைமறைவாகி விட்டனர். ஓட்டப்பிடாரம் அருகே தெற்கு பொம்மையாபுரத்தில் போதையில் தந்தை மகன் கொலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி 58 வது வார்டுக்குட்பட்ட நேருஜி நகர் பகுதியில் போதை தலைக்கேறிய நிலையில் சட்டையை கழற்றி போட்டுவிட்டு யாரையாவது கொலை செய்ய வேண்டும் என்ற வெறிகொண்டு அலைந்த சுள்ளானின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது

அந்த தெருவை சுற்றிவந்த சுள்ளான் திடீரென்று ஓரமாக நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை எட்டி உதைக்கவும், அருகில் நின்ற பெண் சத்தம் போட்டார். வேண்டுமென்றே அவரை வார்த்தைகளால் திட்டி வம்பிழுத்தான்

சுள்ளானுக்கு சற்றும் குறையாத இரு குடிகார சண்டியர்கள், இருவர் ஏற்கனவே போதையில் இருந்தாலும், மீண்டும் மதுவாங்க வரிசையில் நிற்காமல் மது வாங்கிசெல்ல அனுமதிக்காததை ஆயுதப்படை போலீஸ்காரை கண்டித்து போர்க்குரல் எழுப்பினர்

அதுவரை பொறுமை காத்த காவலர் சட்டென்று லத்தியால் இரண்டு வைக்க, அடுத்த நொடியே ஒரு சண்டியர் கவிழ்த்து போட்ட கரப்பான் பூச்சி மாதிரி மல்லாக்க படுத்து விட்டார். மற்றொருவர் முறுக்க அவருக்கும் இரண்டு அடி போனசாக கிடைத்தது

ஆனால், டெல்லி காவல்துறையினரோ வரிசையில் நிற்காமல் மதுவாங்க துடிக்கும் குடிமகன்களை கூலாக டீல் செய்கின்றனர்...! ஒயிட்காலர் குடிகாரர்களிடம் மாமூலாக பணத்தை பெற்றுக் கொண்டு மதுபானங்களை பிளாக்கில் வாங்கிக் கொடுத்து சேவையாற்றி வருவது குறிப்பிடதக்கது

 

குடிமகன்களின் அட்டகாசத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்கவில்லையென்றால் தென்மாவட்டங்களில் சண்டியர்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments