கொரோனா புதிய உச்சம்... ஒரு லட்சத்தை எட்டியது, பாதிப்பு...!

0 1056
கொரோனா புதிய உச்சம்... ஒரு லட்சத்தை எட்டியது, பாதிப்பு...!

கொரோனா பாதிப்பு, வரலாறு காணாத வகையில் உயர்ந்து, வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டி உள்ளது. உயிரிழப்பு, 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

இந்தியாவில், முன் எப்போதும் இல்லாத வகையில், கொரோனாவின் பாதிப்பு உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.மஹாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி விட்டது.

மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் ஒரே நாளில் 85 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, அங்கு மட்டும் ஆயிரத்து 327 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.புனேவில் ஒரே நாளில் 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 760 ஆக உயர்ந்து, பட்டியலில் மீண்டும் 2 - வது இடம் வகிக்கிறது.குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 700 ஐ தாண்டி விட்டது.

டெல்லியை பொறுத்தவரை, கொரோனா பாதிப்பு, 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்திலும் கொரோனா பாதிப்பு, கணிசமாக உயர்ந்துள்ளது.

மேற்கு வங்காளம், ஆந்திரா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதனிடையே, நாடு முழுவதும் 56 ஆயிரத்து 316 பேர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 242 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே நாளில் மட்டும் 157 பேர் பலி ஆகி உள்ளனர்.

ஒரே நாளில் மட்டும் 2 ஆயிரத்து 715 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால், இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 624 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments