மீண்டும் சேவையை துவக்க ஊபர் டாக்சி நிறுவனம் முடிவு

0 1300
ஊரடங்கால் முடங்கியுள்ள தனது கால் டாக்சி சேவையை விரைவில் துவக்க உள்ளதாக ஊபர் அறிவித்துள்ளது.

ஊரடங்கால் முடங்கியுள்ள தனது கால் டாக்சி சேவையை விரைவில் துவக்க உள்ளதாக ஊபர் அறிவித்துள்ளது.

நான்காம் கட்ட ஊரடங்கில் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள தளர்வுகளின் அடிப்படையில் சேவையை துவக்க உள்ளதாக கூறியுள்ள ஊபர், ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்காமான  கட்டுப்பாட்டு நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளது.

அதன்படி சமூக இடைவெளியை உறுதிப் படுத்தும் நோக்கில் ஊபர் பூல் சேவை கிடையாது. ஓட்டுநர்கள் கோவிட் ஹப் என்ற செயலியை தங்களது போன்களில் தரவிறக்கம் செய்வதுடன் ஒவ்வொரு முறையும் சவாரியை துவக்கும் போது முகவுறை அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணிகளைப் பொறுத்த வரை முன் சீட்டில் அமர வேண்டாம் என்றும்  தங்களது லக்கேஜுகளை பயணிகளே கையாள வேண்டும்என்றும் ஊபர் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments