நாட்டிலுள்ள 736 ல் 550 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல்

0 1700
நாட்டிலுள்ள 736 ல் 550 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல்

புலம் பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் சொந்த ஊர்களுக்கு கால்நடையாகவும், ஷ்ராமிக் ரயில்கள் வாயிலாகவும்  திரும்பிக் கொண்டிருப்பதால், நாட்டிலுள்ள 736 மாவட்டங்களில் 550 மாவட்டங்கள் தொற்று பரவிய மாவட்டங்களாக மாறியுள்ளன.

பல மாநிலங்களில் இருந்து கிடைத்த தகவல்களின் படி ஒரே இரவில் 180 மாவட்டங்களில் புதிதாக தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய லட்சக்கணக்கானோர் திரும்பி வந்தால் ஊரகப்பகுதிகளில் தொற்று அளவு கற்பனைக்கு எட்டாத வகையில் உயரும் என உ.பி. பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

புலம் பெயர் தொழிலாளர்கள் பலருக்கு அறிகுறி இல்லாமல் நோய் பரவுவதும், அவர்களுக்கான தங்குமிட வசதிகளை ஏற்படுத்துவதும், பல மாநிலங்களுக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments