வங்கக் கடல் அம்பன் புயல் மேலும் வலுப்பெற்று சூப்பர் புயலாக உருமாறியது

0 12801
அதிதீவிர அம்பன் புயல் மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

அதிதீவிர அம்பன் புயல் மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருமாறியுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

அம்பன் சூப்பர் புயலால், இன்று மத்திய மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று வீசக்கூடும். 

மணிக்கு 230 முதல் 240 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 265 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். இதேபோல, நாளை, மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று, மணிக்கு 200 முதல் 210 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 230 கி.மீ. வரையிலும் வீசக்கூடும்.

வரும் 20ஆம் தேதி, வடக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று, மணிக்கு 180 முதல் 190 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 210 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மே 20ஆம் தேதி வரை, கடல் சீற்றத்துடன் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, வரும் 20ஆம் தேதி வரை மத்திய மற்றும் தெற்கு வங்ககடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தென்காசி பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சேலம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாக கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புயலை சமாளிப்பது குறித்து டெல்லியில் நடக்கும் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

பொதுமக்களை முகாம்களுக்கு மாற்றும் போது கொரோனா சமூக இடைவெளியை எப்படி கடைப்படிப்பது உள்ளிட்டவை குறிதது அதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புயல் பாதிப்பு ஏற்பட வாய்புபுள்ள இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு ஏற்கனவே தேவையான எண்ணிக்கையில் பேரிடர் மீட்புக் குழுவினரை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments