பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடத்துக்கு இறங்கிய வெளிநாடு வாழ் இந்தியர்கள்

0 772
பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளனர்.

பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் இரண்டாமிடத்துக்கு இறங்கியுள்ளனர்.

2020ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் பெரும் பணக்காரர்கள் பட்டியலை தி டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஜேம்ஸ் டைசன் குடும்பம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த வெளிநாடு வாழ் இந்தியர்களான இந்துஜா சகோதரர்கள் ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் இரண்டாவது இடத்திற்கு இறங்கியுள்ளனர்.

அவர்களின் சொத்து மதிப்பு ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாயாகும். இந்தியர்களான டேவிட், சைமன் ரூபன் சகோதரர்களும் ஒரு லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இரண்டாமிடத்தில் உள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலால் ஆலைகள் மூடப்பட்டுள்ளதே இந்துஜா சகோதரர்கள் பணக்காரர்கள் பட்டியலில் இறங்கியதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments