22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கினார் முதலமைச்சர்

0 972
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் கடனுதவி வழங்கினார். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் கடனுதவி வழங்கினார். தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் வேளாண் பொருட்களை கொள்முதல் செய்து, மதிப்புகூட்டி, வணிகரீதியாக சந்தைப்படுத்துகின்றன கொரோனா ஊரடங்கு நேரத்தில் காய்கறிகள், பழங்கள் மற்றும் இதர உணவுப் பொருட்களை சேகரித்து விநியோகம் செய்ய முன்வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வரை இடைநிலை மூலதனகடன் உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தற்பொழுது 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, 2 கோடியே 5 லட்சம் ரூபாய் இடைநிலை உதவியாக வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற நிகழ்வில், 22 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கிடும் அடையாளமாக, மூன்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments