தமிழகத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும் -தமிழக அரசு

0 1213
தமிழகத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இன்று முதல் இயங்கும்

ஐம்பத்து நான்கு நாட்களுக்குப் பிறகு, தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று செயல்படத் தொடங்குகின்றன.

இது தொடர்பாக கடந்த 15ம் தேதியே வெளியிட்டிருந்த அறிக்கையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களை 2 பிரிவாக பிரித்து சுழற்சிமுறையில் பணியாற்ற வைக்க வேண்டும் என்றும், வாரத்தின் 6 நாட்களும் இனி அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

பணிக்கு வரும் ஊழியர்கள் தவறாது தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஊழியர்கள் தவிர, ஏ குரூப் அதிகாரிகள், தலைமைப் பதவியில் இருக்கும் அதிகாரிகள், அனைத்து வேலை நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசு ஊழியர்கள் வந்து செல்வதற்காக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments