பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு எப்போது? முதலமைச்சர் இன்று ஆலோசனை

0 1128
பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு எப்போது? முதலமைச்சர் இன்று ஆலோசனை

மேட்டூர் அணை திறப்பு தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கும் காலத்தைக் கணக்கிட்டு, நிர்ணயிக்கப்பட்ட தேதியான ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் நிலை இருந்து வந்தது. பருவமழை தவறும்போதும், கர்நாடக அணைகளில் இருந்து போதிய நீர் திறக்கப்படாத போதும் மேட்டூர் அணை திறக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான நீர் திறப்பு குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். டெல்டா மாவட்ட அமைச்சர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments