முயல நாய் விரட்ட... டிக்டாக் காட்டிக் கொடுக்க... நாயோடு கைதான வேட்டையன்ஸ்..!

0 25467
சங்கரன்கோவில் அருகே முயல் வேட்டையாட நாய்களை ஏவிய இளைஞர்கள், அதனை டிக்டாக்கில் வெளியிட்டதால் வனத்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.

சங்கரன்கோவில் அருகே முயல் வேட்டையாட நாய்களை ஏவிய இளைஞர்கள், அதனை டிக்டாக்கில் வெளியிட்டதால் வனத்துறையினரிடம் சிக்கி உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்த பாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஒரு டஜன் வேட்டை நாய்களோடு முயல்வேட்டைக்குச் சென்றுள்ளனர்.அங்கு சாமர்த்தியமாய் புதரில் பதுங்கிய முயல் ஒன்றை வேட்டை நாய்களை ஏவிப் பிடித்து வரச்செய்யும் காட்சிகளை வீடியோவாக எடுத்து டிக்டாக்கில் "வேட்டையாடும் வம்சம்" என கெத்தாகப் பதிவிட்டனர்.

இந்த வீடியோவை பார்த்த வனத்துறையினர் முயல் வேட்டைக்கு நாயை ஏவிய 3 வேட்டை நாயகர்களையும் பிடித்து விசாரித்து. ஆதாரத்தோடு சிக்கியதால் ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமாக விதித்தனர்அபராதமாக பணத்தைப் பறிகொடுத்த வேட்டையாடும் வம்ச வாரிசுகளின் வாயால் புத்தி சொல்ல வைத்து டிக்டாக்கில் பதிவிட செய்தனர்.

தங்கள் வீரத்தை காட்ட, காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாடி டிக்டாக்கில் பதிவிட்டால் , கையில் முயல் சிக்குகிறதோ இல்லையோ வனத்துறையினரிடம் வேட்டையாடும் பரம்பரை சிக்கிக் கொள்ளும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments