உள்நாட்டு விமான போக்குவரத்து முன்பதிவு தொடங்கப்படவில்லை - ஏர் இந்தியா

0 1347
உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டதாக வெளியான தகவலை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டதாக வெளியான தகவலை ஏர் இந்தியா நிறுவனம் மறுத்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டடுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு விமான பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு ஏர் இந்தியா நிறுவனத்தால் தொடங்கப்பட்டதாக வாட்ஸ் அப் செயலியில் தகவல்கள் பரவின.

இதை மறுத்து ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஏர் இந்தியா விமான பயண டிக்கெட்டுகள் முன்பதிவு அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசிடம் இருந்து உத்தரவுகள் வந்தபிறகே, டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கப்படும் எனவும் ஏர் இந்தியா நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments