வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் அதிதீவிரப் புயலாக மாறியது

0 3769
வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

ஞாயிறு காலை எட்டரை மணிக்கு ஒடிசாவின் பாராதீப்புக்குத் தெற்கே 990 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக் கடலில் உள்ள புயல் தீவிரப் புயலாக மாறியுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாக மாறும். அடுத்த 24 மணி நேரத்தில் மெதுவாக வடக்கு நோக்கியும் அதன்பிறகு வடகிழக்குத் திசையிலும் நகரும். வரும் இருபதாம் தேதி பிற்பகலில் மேற்குவங்கத்தின் சாகர் தீவு, வங்கதேசத்தின் ஹாதியா தீவு இடையே கரையைக் கடக்கும்போது மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இதனால் 19, 20ஆம் தேதிகளில் ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

புயல் நிலை கொண்டுள்ள பகுதிகளில் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் நாளை முதல் 20ஆம் தேதி வரை ஒடிசா, மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments