முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கலை அறிவித்தது நாட்டுக்குச் சோகமான நாள் - பி.எம்.எஸ். கண்டனம்

0 1922
முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கலை அறிவித்தது நாட்டுக்குச் சோகமான நாள் என ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது.

முதன்மையான துறைகளில் தனியார்மயமாக்கலை அறிவித்தது நாட்டுக்குச் சோகமான நாள் என ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்க அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி, கனிமம், பாதுகாப்புத் தளவாட உற்பத்தி, விண்வெளி ஆய்வு, அணு ஆற்றல், மின்வழங்கல் ஆகிய துறைகளில் தனியாரை அனுமதிக்கும் அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனியன்று வெளியிட்டார்.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ்.சின் தொழிற்சங்க அமைப்பான பாரதீய மஸ்தூர் சங்கம், முடிவெடுக்குமுன் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரிடமும் கலந்து பேசாதது அரசின் கொள்கையில் அதற்கே நம்பிக்கை இல்லாததைக் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளது. தனியார் மயமாக்கல் வேலையிழப்புக்கும், சுரண்டலுக்கும் வழிவகுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments